கொரோனாவில் இருந்து தப்பிக்க... பெண்களின் உள்ளாடையை முகமூடியாக மாற்றிய பெண்! வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் காரணமாக முகமூடிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஜப்பானை சேர்ந்த பெண் மொடல் ஒருவர் உள்ளாடை மூலம் முகமூடி செய்து போட்டிருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகமெங்கும் கொரோனா வைரஸ் பீதி இருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் பேப்பர் மற்றும் முகமூடிகள் போன்றவை வந்த வேகத்தில் விற்று தீர்ந்துவிடுகின்றன.

இதற்காக ஒரு சில இடங்களில் சண்டைகள் கூட நடக்கின்றன.

இந்நிலையில் இந்த முகமூடி தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக, ஜப்பானை சேர்ந்த மொடல் Yumeno Asahina தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கடந்த 3-ஆம் திகதி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், பெண்கள் உபயோகப்படுத்தாத உள்ளாடையை வைத்து முகமூடி தயாரித்து அணிந்துள்ளார், அது எப்படி தயாரிப்பது என்பது தொடர்பான புகைப்படமும் வெளியாகியுள்ளது.

இதைக் கண்ட இணையவாசிகள் சிலர் அதே போன்று முயற்சி செய்த முகமூடி தயாரித்த புகைப்படங்களை,அவரின் டுவிட்டருக்கு கீழே பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர் கிண்டலாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்