இத்தாலியில் தீவிரமடையும் கொரோனா... அரசு அதிரடி உத்தரவு: கொரோனாவை பரப்புபவர்களுக்கு 21 ஆண்டுகள் சிறை!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

இத்தாலியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 189இலிருந்து 1.016ஆக உயர்ந்துள்ள நிலையில், நாட்டின் மூத்த மருத்துவர்களில் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 15,113 ஆகியுள்ளது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 610 படுக்கைகள் மட்டுமே உள்ள நிலயில், அவற்றில் 605 படுக்கைகளையும் கொரோனா நோயாளிகளே ஆக்கிரமித்துள்ளனர். Lombardy என்ற பகுதியிலுள்ள மருத்துவமனைகள் சடலங்களால் நிரம்பி வழிகிறது.

இறந்தவர்களின் உடல்களை விரைவாக அடக்கம் செய்வதற்காக, இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவது வேகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இத்தாலியின் மூத்த மருத்துவர்களில் ஒருவரான Roberto Stella என்பவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

மேலும் கொரோனா பரவுவதை எப்படியாவது கட்டுப்படுத்துவதற்காக, இத்தாலியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது, கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான பண்டிகைக்காலமாக உள்ள நிலையிலும், வழக்கத்துக்கு மாறாக ரோமில் கத்தோலிக்க தேவாலயங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, கொரோனாவை பரப்புவதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ளது.

யாராவது வேண்டுமென்றே கொரோனாவை பரப்பியதால் யாராவது உயிரிழந்ததாக தெரியவந்தால், அவர்களுக்கு 21 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது.

விதிகளை மீறுவோருக்கு ஆளுக்கு 206 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட உள்ளதுடன், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

கொரோனா தொற்றுடைய யாரேனும் 2 வாரங்கள் தனிமைப்படுத்தப்படுவதை மீறி வெளியே வந்தது தெரியவந்தால், அவர்களுக்கு 1 முதல் 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்