செயற்கை கோமாவில் வைக்கப்பட்ட ஆசிரியை! கொரோனவால் திடீரென உயிரிழப்பு.. நாட்டின் முதல் பலி என அறிவிப்பு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

போலாந்தில் கொரோனா வைரஸுக்கு முதல் நபராக ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸால் போலாந்தில் இதுவரை 51 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில் அந்நாட்டை சேர்ந்த 57 வயதான ஆசிரியை சமீபத்தில் நிமோனியா காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் செயற்கை கோமாவில் வைக்கப்பட்டு வெண்டிலேட்டரில் இருந்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிரிந்தது என்று போஸ்னான் உதவி மேயர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து போலாந்து அதிபர் ஆந்த்ரேய் டுடா கூறுகையில், எதை கண்டு கடந்த சில நாட்களாக பயந்தோமோ அது நடந்துள்ளது.

நமது நாட்டில் கொரோனால் முதல் நபர் உயிரிழந்துள்ளார்.

அவர் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்