நோயாளிக்கு கைகுலுக்கியதால் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ராணி!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளான அமைச்சருக்கு கைகுலுக்கியதை அடுத்து, ஸ்பெயின் ராணி லெடிசியாவிற்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், ஸ்பெயினில் உள்ள அனைத்து பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் திங்கள்கிழமை முதல் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாட்ரிட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், சமத்துவ அமைச்சர் ஐரீன் மோன்டெரோவிற்கு, ஸ்பெயினின் ராணி லெடிசியா கைகொடுத்தார்.

ஆனால் அடுத்த சில தினங்களில் அவருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, ராணிக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாட்ரிட் மற்றும் லா ரியோஜாவில் உள்ள பள்ளிகள் இந்த வார தொடக்கத்தில் மூடப்பட்டிருந்த நிலையில், கட்டலோனியா, கலீசியா போன்ற சில பகுதிகளில் கல்வி மையங்கள் நாளை மூடப்படும் எனவும், மீதமுள்ளவை திங்கள்கிழமை மூடப்படும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்