சீனா- வுஹான் மருத்துவமனையில் தலையை மொட்டையடிக்கும் மருத்துவர்கள்: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது தொற்று ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக சீனாவின் வுஹான் நகரில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தலையை மொட்டையடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்பகுதியில் உள்ள ஹூபே மாகாணம் வியாழக்கிழமை வெளியிட்ட தகவலின்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

இது நெருக்கடியின் அளவு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியது. புதனன்று மட்டும் சீனாவின் ஹூபே மாகாணத்தில் 242 பேர் கொரோனா நோயால் இறந்துள்ளனர்.

இதனையடுத்து சீனாவில் மட்டும் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 1,367 என வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், வுஹான் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் பணியாற்றும் ம்மருத்துவர்கள் நோய் பாதிப்பு மேலும் பரவாமல் இருக்க தங்கள் தலையை மொட்டையடித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்