கொரோனாவால் பல நாட்களாக குடும்பத்தை சந்திக்காத பொலிஸ்: சாலையில் கண்ணீர் வடிக்கும் வீடியோ!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் தாக்குதலால் பல நாட்களாக குடும்பத்தை சந்திக்காமல் பணியில் இருக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவர், கண்ணீர் வடிக்கும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 வைரஸ் தாக்குதலால் தற்போதுவரை 1300க்கும் அதிகமானோர் பலியாகியிருப்பதோடு, 60,407 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இதன் தாக்கம் சீனாவில் அதிகரித்திருப்பதால், மருத்துவர்கள், அதிகாரிகள், பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்கள் ஓய்வில்லாமல் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சீனாவின் Ziyang நகரத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நீண்ட நாட்களாக தனது குடும்பத்தை கூட சந்திக்காத பொலிஸ் ஒருவர், மதிய இடைவேளையில் கண்ணீரை துடைத்துக்கொண்டே உணவருந்துகிறார்.

அதற்குள் அதிகாரிகள் அழைப்பு விடுத்ததால், பாதியிலே உணவை மூடிவிட்டு பணிக்கு திரும்புவதை போல வீடியோ அமைந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்