காருக்குள் முற்றிய வாக்குவாதம்..! திடீரென குண்டின் கொக்கியை எடுத்த நபர்! நண்பர்களுக்கு நேர்ந்த கதி: சிசிடிவி-யில் பதிவான காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்

உக்ரைன் நாட்டில் நண்பர்களிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த ஒருவர் கையெறி குண்டின் கொக்கியை எடுத்து வெடிக்கச் செய்ததில் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

மத்திய வின்னிட்சியா பிராந்தியத்தில் லெலியாக்கி கிராமத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.

நான்கு நண்பர்கள் Zhmerynka பகுதிக்கு காரில் சென்றுள்ளனர். போதையில் பாதை மாறிச்சென்ற நிலையில் நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஒருவர் காரிலிருந்து இறங்கி அங்கிருந்தவர்களிடம் வழி கேட்கச்சென்றுள்ளார்.

இதன்போது, காருக்குள் இருந்த நண்பர்களில் ஒருவர், பாக்கெட்டில் வைத்திருந்த கையெறி குண்டை எடுத்து அதன் கொக்கியை எடுத்து வெடிக்கச் செய்துள்ளார்.

இதில், காருக்குள் இருந்த மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மூவரும் அறுவை சிகிச்சைக்கு பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியிலிருந்த சிசிடிவி-ல் பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், அவருக்கு கையெறி குண்டு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்