கொரோனாவால் ஒரே நாளில் 254 பேர் உயிரிழப்பு எதிரொலி: இரண்டு உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்த சீனா

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஒரே நாளில் 254 பேர் உயிரிழந்ததை அடுத்து, சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

COVID-19 என அழைக்கப்படும் கொடிய வைரஸானது இதுவரை குறைந்தது 1,369 பேரைக் கொன்றதோடு, உலகளவில் 60,360 க்கும் அதிகமானவர்களை பாதித்துள்ளது.

உலக நாடுகளையே பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வேலையில், விஞ்ஞானிகள் பலரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான மாகாணமான ஹூபே மற்றும் அதன் தலைநகரான வுஹானில் உள்ள கட்சித் தலைவர்களை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி மாற்றியுள்ளது என்று மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வுஹானின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான மா குய்கியாங் (இடது) மற்றும் ஹூபே மாகாணத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் Jiang Chaoliang (வலது) ஆகியோர் பணிநீக்கம் செய்யப்படுவதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை ஏழு மடங்கிற்கும் மேலாக உயர்ந்திருப்பதோடு, நேற்று ஒரே நாளில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டரை மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதை அடுத்து இந்த செய்தி வந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்