ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது நாங்கள் தான்..! படமெடுத்த காட்சியை வெளியிட்டு நிரூபித்த துருக்கி பயங்கரவாத குழு

Report Print Basu in ஏனைய நாடுகள்

சிரிய இராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தும் காட்சியை துருக்கி பயங்கரவாத குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 11ம் திகதி இட்லிப் நகரத்தில் உள்ள அல்-நயராப் வன்வெளியில் பறந்துக்கொண்டிருந்த சிரியா இராணுவத்திற்கு சொந்தமான எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலை துருக்கியின் அல்கொய்தாவுடன் தொடர்பில் உள்ள பயங்கரவாத குழு நடத்தியதாக பொறுப்பேற்றது. எனினும், சிரியா இராணுவம் தரப்பில் இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், தாங்கள் தான் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினோம் என்பதை நிரூபிக்கும் வீடியோ காட்சிகளை பயங்கரவாத குழு வெளியிட்டுள்ளது.

குறித்த காட்சியில் ஆயுதமேந்திய குழுக்கள் கூடியிருக்கும் நிலையில், ஒரு கட்டிடத்தின் மேலிருந்து வான்வெளியை நோக்கி சிறிய ரக ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது.

மேலே சீறிச் செல்லும் ஏவுகணை தாக்க ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிவது குறித்த காட்சியில் காணலாம்.

ஆனால், குறித்த வீடியோ இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், குறித்த ஏவுகணை எம்.ஐ-17- தாக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்