கொரோனா தீவிரம்..! அயராத பணியில் நோயாளிகளுக்கு முன் இல்லற வாழ்வில் இணைந்த மருத்துவ ஜோடி..! குவியும் வாழ்த்துக்கள்

Report Print Basu in ஏனைய நாடுகள்

சீனாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மருத்துவமனையிலே திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் இன்று உலகிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக சீனாவில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

நோயை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஓய்வெடுக்க நேரமின்றி தீவிரமாக சேவையாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய சீனாவின் ஹெனன் மாகாணத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் இரண்டு மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்திலே திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

விருந்தினர்கள் இல்லை, திருமண உடை இல்லை, சக ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு முன்னிலையில் மாஸ்க் அணிந்த படி இருவரும் மணம் முடித்துள்ளளனர். குறித்த வீடியோ அந்நாட்டு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மருத்துவர்கள் குறித்த மேலதிக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. எனினும், வீடியோவை கண்ட பலர் ஜோடியை ஆசிர்வதித்தும், வாழ்த்துகளை தெரிவித்தும் வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்