மிருகத்தனமாக கொலை செய்யப்பட்ட மனைவி: உறுப்புகளை வீசியெறிந்து கணவன் வெறிச்செயல்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மனைவியை கொலை செய்து, அவருடைய உடல் எச்சங்களை கால்வாயில் வீசியெறிந்த நபரை மெக்சிகன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மெக்சிகோவை சேர்ந்த 46 வயதான எரிக் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ என்பவர் போதையில் இருந்த போது, அவருடைய மனைவி இங்க்ரிட் எஸ்கமில்லா வர்காஸ் (25) உடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த எரிக், சமையல் கத்தியை கொண்டு மனைவியின் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அடையாளம் காண முடியாதபடி, தலையிலிருந்து கால் வரை தோலை உரித்துவிட்டு, உறுப்புகளை அகற்றி கால்வாயில் வீசி எறிந்துள்ளார்.

தடயங்களை அழித்த பின்னர் தனது முன்னாள் மனைவிக்கு போன் செய்து, நடந்தவை குறித்து கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இங்க்ரிட் எஸ்கமில்லாவின் உடல் எச்சங்களை கைப்பற்றினர். மேலும், எரிக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் உள்ளூர் ஊடகமான tabloid, தோல் உரிக்கப்பட்ட நிலையில் இருந்த இங்க்ரிட் எஸ்கமில்லாவின் கோரமான படத்தை முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதற்கு நகரம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மெக்ஸிகோவின் தேசிய மகளிர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்