நதியில் வீசப்படும் பாலியல் தொழிலாளிகளின் உடல்! முதல் முறையாக இஸ்லாம் முறையில் நல்லடக்கம்...

Report Print Abisha in ஏனைய நாடுகள்

வங்கதேசத்தில் முதல் முறையாக இஸ்லாம் முறைப்படி பாலியல் தொழிலாளியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அந்நாட்டில் நீண்ட காலமாக, பாலியல் தொழிலாளிகளை இஸ்லாம் முறையில் அடக்கம் செய்வதில்லை.

வங்கதேசத்தில் பாலியல் தொழில் சட்டவிரோதமான தொழிலாக இல்லை என்றாலும், அதை கடைபிடித்து வந்தனர்.

இறுதி சடங்கிற்கு எந்த இல்லாமிய தலைவர்களும் செல்லவோ அதற்கு பிரார்த்தனை செய்யவே ஒப்புக் கொள்வதில்லை.

மேலும், பாலியல் தொழிலாளிகளின் உடல் சாதாரண முறையில் அடக்கம் செய்யப்படவோ அல்லது நதிகளில் வீசப்படவோ செய்யும் முறை இருந்து வருகின்றது.

அதன் பின், பாலியல் தொழிலாளிகள் சிலர் உள்ளூர் பொலிசாரின் உதவியுடன் இஸ்லாமிய தலைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் முதன் முதலில், இறந்த ஹமிடா பேகம் என்ற 65 வயது பாலியல் தொழிலாளியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

முதலில், தயங்கிய மதகுரு பின்னர், அதற்கு ஒப்புக்கொண்டு பிரார்த்தனை செய்து உடல் நல்லடக்கம் செய்தார்.

இதன் மூலம், வங்கதேசம் நாட்டில், முதல் முறையாக நல்லடக்கம் செய்யபட்ட பாலியல் தொழிலாளி ஹமிடா பேகம் என்று பெயர் பெற்றுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்