கொரோனா வைரஸ்: ஒரே நாளில் 242 பேர் பலி... 14,840 பேருக்கு நோய் பாதிப்பு..! உண்மை நிலவரத்தை விவரித்த நிபுணர்கள்

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸால் சீனாவின் ஹூபே மாகாணத்தில் பெப்ரவரி 12ம் திகதி மட்டும் 242 பேர் உயிரிழந்துள்ளது மக்களிடையே நோய் குறித்த பயத்தை மேலும் அதிகரித்துள்ளது.

அதே சமயம் பெப்ரவரி 12ம் திகதி மட்டும் 14,840 பேருக்கு நோய் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெப்ரவரி 13ம் திகதி வரை உலகளவில் கொரோனா வைரஸால் 1,368 பேர் உயிரிழந்துள்ளனர். 60,310 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹூபே மாகாணத்தில் ஒரே நாளில் உயிரிழப்பு மற்றும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அசுரவேகத்தில் அதிகரித்ததற்கான காரணத்தை நிபுணர்கள் விவரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தோன்றிய வுஹான் நகரம் ஹூபே மாகாணத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய சீனாவின் ஹூபே மாகாணம், நோயால் பலியானவர்கள் மற்றும் தொற்றுநோய் உறுதிசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்த அதன் தினசரி அறிக்கையில், வியாழக்கிழமை முதல் முறையாக மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை சேர்க்கத் தொடங்கியது.

தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என நாட்டின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் ஜெங் குவாங் கூறியதாவது, ஹூபே மாகாணத்தின் 14,840 புதிய வழக்குகளில் 13,332 மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்டவை.

ஆய்வக சோதனைகள் மூலம் இன்னும் தொற்றுநோய் உறுதிசெய்யப்படவில்லை என்றாலும், நோய் அறிகுறிகளைக் காட்டும் நபர்களே மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்ட வழக்குகள் என ஜெங் விளக்கினார்.

நோய் அறிகுறிகளைக் காண்பிப்பவர்களும், சி.டி ஸ்கேனனில் நுரையீரல் பாதிக்கப்பட்டதாக காண்டறிப்பட்டவர்களும் மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்ட வழக்குகளில் அடங்குவர்.

உயிரிழந்த 242 பேரில், 135 பேர் மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்ட வழக்குகளில் அடங்குவர். ஆயினும் புதன்கிழமை ஹூபேயில் இறந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்