கொரோனா பாதிப்புடன் மாயமான பல மில்லியன் மக்கள்: பீதியில் உலக நாடுகள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவின் வுஹான் நகரில் இருந்து மொத்தமாக 5 மில்லியன் மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மாயமாகியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

மனிதர்களிடம் இருந்து மிக விரைவாக கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், இந்த மாயமான சீனத்து மக்களால் உலக நாடுகள் பீதியடைந்துள்ளன.

மர்மமான கொரோனா வியாதி தொடர்பில் முதல் முறையாக மருத்துவர்கள் கண்டறிந்த அந்த வாரம் மில்லியன் கணக்கில் மக்கள் வுஹான் நகரில் இருந்து பேருந்து, ரயில் மற்றும் விமானங்களில் வெளியேறியதாக தெரியவந்துள்ளது.

இவர்களில் அனைவருக்கும் அல்லது பெரும்பாலானோருக்கு வைரஸ் தொற்று இருந்திருக்கலாம் என நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

வுஹான் நகரில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இறுதியாக ஜனவரி 23 ஆம் திகதி அதிகாரிகள் தரப்பு, நகரை மொத்தமாக முடக்கியது.

நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேறவும், உள்ளே வரவும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கையானது காலம் கடந்த செயல் என தற்போது நிபுணர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

வுஹான் நகர மேயரே, 5 மில்லியன் மக்கள் வெளியேறியிருக்கலாம் என்ற எண்ணிக்கையை கசிய விட்டுள்ளார்.

தற்போது இந்த 5 மில்லியன் மக்களும் நாட்டின் எந்த மாகாணங்களுக்கு சென்றுள்ளனர் என்ற தகவலை சேகரித்து வருகின்றனர்.

இதில் வுஹான் நகரம் அமைந்துள்ள ஹூபே மாகாணத்திற்கு உள்ளேயே 70 சதவிகித மக்கள் சென்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

14 சதவிகித மக்கள் அருகாமையில் உள்ள ஹுனன், அன்ஹுய் மற்றும் ஜியாங்சி உள்ளிட்ட 4 மாகாணங்களுக்கு சென்றுள்ளனர்.

தற்போதைய சூழலில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஹூபே மாகாணத்தில் வுஹான் நகரில் மட்டுமே என்றாலும் சோங்கிங், ஷாங்காய் மற்றும் பீஜிங் உள்ளிட்ட நகரங்களிலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மொத்தமாக 5 மில்லியன் மக்கள் வுஹானில் இருந்து வெளியேறியுள்ளது மிகப்பெரிய சவாலான விடயம் என குறிப்பிட்டுள்ள நிபுணர் ஒருவர்,

இந்த மக்கள் கண்டிப்பாக இனி வுஹான் நகருக்கு சமீப காலத்தில் திரும்ப மாட்டார்கள் எனவும், ஆனால் நாட்டின் பல பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க, இந்த 5 மில்லியன் மக்களையும் உடனடியாக அடையாளம் காண வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

ஜனவரி 23 முதல் 26 வரையான காலகட்டத்தில் வுஹானில் இருந்து 15 முக்கிய நகரங்களுக்கு மக்கள் சென்றுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நகரங்களில் அப்போது கடுமையான கட்டுப்பாடுகள் ஏதும் இருந்திருக்கவில்லை எனவும்,

அதன் பின்னரே அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் சீனத்து பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தன.

மேலும், இத்தாலி மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் விமான சேவையை முற்றாக தடை செய்தன. கொரோனா பாதிப்புக்கு பின்னர் சீனாவில் 18 நகரங்கள் மிக ஆபத்தான பகுதியாக கணிக்கப்பட்டது.

இந்த பகுதிகளில் இருந்து தாய்லாந்து, ஜப்பான், ஹாங்காங், தைவான், தென் கொரியா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு சீன பயணிகள் சென்றுள்ளனர்.

வுஹான் முற்றாக முடக்கப்பட்ட 10 நாட்களுக்குள் சுமார் 14 நாடுகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதன் காரணம் இதுவாக இருக்கலாம் என தற்போது நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்