சீனா- வுஹானை அடுத்து முற்றாக முடக்கப்பட்ட மேலும் இரு நகரங்கள்: சிவப்பு எச்சரிக்கை அமுல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கொரொனா அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், சீனாவின் தலைநகரமான பீஜிங் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் கொரோனா மரணங்கள் கிடிகிடுவென அதிகரித்து வருகிறது. மருந்து மற்றும் பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்டவை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

மரண எண்ணிக்கை 815 என உத்தியோகப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய சூழலில் இந்த எண்ணிக்கையானது வரும் நாட்களில் மேலும் பலமடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இந்த நிலையில் நாளின் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் சீனத்து தலைநகர் பீஜிங் மற்றும் பொருளாதார மையமாக கருதப்படும் ஷாங்காய் ஆகிய இரு நகரங்களும் கொரோனா பீதி காரணமாக முடக்கப்பட்டுள்ளது.

21.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பீஜிங் நகரம் தற்போது பேய் நகரமாக, வெறிச்சோடி காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பனிக்காலம் என்பதால், உலக நாடுகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுலாவுக்கு குவிய வேண்டிய நாட்கள் இது என கூறும் உள்ளூர் மக்கள்,

ஆனால் கொரோனா பீதியால் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, சிவப்பு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

பொதுவாக இந்த காலகட்டங்களில் சுற்றுலா பயணிகளாலும் உள்ளூர் மக்களாலும் பீஜிங் நகரம் திணறும்.

ஆனால் சுற்றுலா பயணிகள் ஏதுமின்றி, ரோந்துப்பணியில் ஈடுபடும் பாதுகாப்பு அதிகாரிகளும், மருத்துவ உதவிக் குழுக்களும், துப்புரவு தொழிலாளர்களுமே அதிகம் காணப்படுவதாக சர்வதேச பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

பேருந்து, டாக்ஸி உள்ளிட்ட எந்த போக்குவரத்தும் பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களில் இல்லை எனவும்,

ஆனால், பொதுமக்களில் சிலர் பனிப்பொழிவை ரசிக்க உரிய பாதுகாப்புடன் தெருக்களில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

உணவு வகைகளுக்கு பெயர் போன பீஜிங்கில் 100-கும் மேற்பட்ட பிரபலமான உணவு விடுதிகள் உள்ளன.

ஆனால் தற்போது ஒருசில உணவகங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. எஞ்சிய உணவகங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தலைநகர் பீஜிங்கில் இருந்து 620 மைல்கள் தொலைவில் உள்ளது கொரோனா வியாதியின் பிறப்பிடமான வுஹான் நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்