இளம்பெண்ணை கடித்து குதறிய சிங்கங்கள்... படுகாயங்களுடன் உயிரிழந்த பரிதாபம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தென்னாப்பிரிக்காவில் பூங்காவில் பணிபுரிந்த வந்த இளம்பெண் ஒருவர் அடைப்புக்குள் நுழைந்ததும், அங்கிருந்த சில சிங்கங்கள் கடித்து குதறியுள்ளன.

தென்னாப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் உள்ள ஒரு சஃபாரி பூங்காவில் 21 வயதான ஸ்வான்ஸ் வான் வைக் என்கிற இளம்பெண் பணிபுரிந்து வந்துள்ளார்.

வியாழக்கிழமை அன்று அவர் விலங்குகளின் அடைப்புக்குள் நுழைந்த போது சிங்கங்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு மற்ற ஊழியர்கள் விரைந்துவந்த போது, ஆழமான படுகாயங்களுடன் அவர் வாயிலுக்கு வெளியே கிடந்துள்ளார்.

அவரை காப்பற்றுவதற்கான தீவிர முயற்சிகளில் மருத்துவர்கள் ஈடுபட்டிருந்த போதிலும் கூட, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணையை ஆரம்பித்துள்ள பொலிஸார், எத்தனை சிங்கங்கள் தாக்குதலில்ன் ஈடுபட்டன என்பது அறியப்படவில்லை என கூறியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட சிங்கங்கள் அழிக்கப்படுமா என்பது குறித்து தங்களால் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்