94 பயணிகளுடன் ஓடுபாதையில் மோதிய விமானம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரஷ்யாவில் தரையிறங்கும் போது விமானத்தின் வால்பகுதி பலமாக தரையில் மோதியுள்ளது.

ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து யுடேர் விமானம் 94 பயணிகளுடன் உசின்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது.

தரையிறங்கும் நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பலமாக ஓடுபாதையில் மோதி நின்றுள்ளது.

அவசரகால சேவைகளின்படி, விமானம் தரையிறங்கும் போது கியர் பிரச்சனைகள் அதன் வால் பகுதி ஓடுபாதையைத் தாக்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட தகவல்களின் படி, விமானத்தில் இருந்த 94 பேரும் பாதிப்பில்லாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், உசின்ஸ்க் விமான நிலையம் அதன் வழக்கமான அட்டவணைப்படி தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், பயணிகளில் விமானத்தை விட்டு வெளியேறியதும், அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கான ஆரம்ப காரணமாக மோசமான வானிலை மற்றும் தெரிவுநிலை என கருதப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்