140க்கும் அதிகமானோர் கொன்றுகுவிக்கப்பட்ட சம்பவம்: சிறையிலிருந்து தப்பிய முக்கிய குற்றவாளி!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாயைக் கொல்ல முயன்ற தலிபான் துப்பாக்கிதாரி பாகிஸ்தானில் காவலில் இருந்து தப்பித்ததாக பெருமை பேசியுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப், சிறுமிகளின் கல்விக்கான பிரசாரகராக தனக்கென ஒரு பெயரை கொண்டிருந்ததால், எஹ்சானுல்லா எஹ்சன் என்கிற தலிபான் துப்பாக்கிதாரியால் பள்ளி பேருந்தில் வைத்து தாக்குதலுக்குள்ளானார்.

தலையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்த மலாலா அங்கிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு பிரித்தானியா கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் முழுவதுமாக குணமடைந்த மலாலா, 2014 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார். பர்மிங்காமில் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் ஆக்ஸ்போர்டில் பட்டம் பெற்றார்.

இதற்கிடையில் 2017ம் ஆண்டில் அவரை துப்பாக்கியால் சுட்ட எஹ்சன் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

அவர் சரணமடைவதற்கு முன்பு, 2014ம் ஆண்டு டிசம்பரில் பெஷாவர் இராணுவ பொதுப் பள்ளியில் 140 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தவர்களில் முக்கியமானவராக இருந்திருந்தார். அதில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குற்றவாளி வீட்டுச்சிறையில் இருந்து தப்பிவிட்டதாக பெருமை பேசியுள்ளார். 2017 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அதிகாரிகள் அவரைக் கைப்பற்றிய பின்னர் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக அவர் கூறினார். அதாவது அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டுக் காவலில் இருக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகள் தனக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால் அவர் தனது வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக கூறியுள்ளார். அவரது கூற்று குறித்து அதிகாரிகள் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

தப்பிய குற்றவாளி காவலில் இருந்தபோது ஒரு குழந்தைக்கு தந்தையானதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் சரணடைவதற்கான விதிமுறைகளின் ஒரு பகுதியாக பணம் பெறுவதாகவும், கைதுக்கு பின் அவருக்கு பணம் செலுத்த அதிகாரிகள் தவறியதாலே அவர் தப்பியதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்