கொரோனாவால் சீனாவில் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் குடிமக்களை மீட்க முடியாது! கைவிட்ட நாடு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சீனாவில் சிக்கியுள்ள தங்கள் குடிமக்கள் 117 பேரை மீட்கும் திட்டத்தை வங்கதேச அரசு கைவிட்டுள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை அங்கு 800-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளார்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார். 25 நாடுகளுக்கும் மேலாக அந்த வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வங்கதேசத்தைச் சேர்ந்த மக்கள் சீனாவில் சிக்கி இருந்தனர். அவர்களை மீட்க முதல்கட்டமாக கடந்த 1-ம் திகதி அரசு விமான நிறுவனமான பிமான் ஏர்லைன்ஸ் சென்றது. அந்த விமானத்தில் 15 குழந்தைகள் உள்ளிட்ட 312 பேர் மீட்கப்பட்டு அழைத்துவரப்பட்டனர்.

இந்நிலையில் இன்னும் 171பேர் சீனாவில் சிக்கி இருப்பதால், 2-வது கட்டமாக அவர்களை அழைத்துவர வங்கதேச அரசு விமானத்தை ஏற்பாடு செய்தது. ஆனால், சீனாவில் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்துக்கு அஞ்சி, தங்களின் உயிரைப் பாதுகாக்கும் வகையில் விமானிகள் விமானத்தை இயக்க மறுத்துவிட்டனர், மேலும், விமான ஊழியர்களும் விமானத்தில் செல்ல மறுத்துவிட்டனர்

இது குறித்து வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமன் கூறுகையில், எங்களால் இப்போது எந்த விமானத்தையும் அனுப்ப முடியாது. விமானியோ அல்லது விமான ஊழியர்களோ செல்ல மறுத்துவிட்டார்கள்.

ஆதலால், சீனாவில் சிக்கி இருக்கும் வங்கதேச மக்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துவிட்டோம். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றைச் சீன அதிகாரிகள் வழங்குகிறார்கள். பற்றாக்குறை ஏற்பட்டது என்று கூறுவது தவறாகும்.

இப்போதுள்ள சூழலில் அவர்களை மீட்க முடியாவிட்டாலும் விரைவில் மீட்போம் என நம்புவதாக கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்