கொரோனாவை கண்டுபிடித்த மருத்துவரை எச்சரித்த பொலிசார்! வெளியான ஆதாரம்: உண்மைகளை உடைத்த தாயார்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் கொரோனா வைரஸை முதன் முதலில் கண்டுபிடித்த மருத்துவரை, பொலிசார் எச்சரித்த கடிதம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

கொரோனா என்று உயிர்கொல்லி வைரஸ் சீனா மக்களை அடுத்தடுத்து பலி வாங்கி வருகிறது. இதை கட்டுப்படுத்த முடியாததால், சீன அரசு, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருணை கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாகவும், ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த கொரோனா வைரஸை Li Wenliang(34) என்ற சீன மருத்துவர் முதன் முதலில் கண்டுபிடித்துவிட்டார். இது குறித்து இவர் உடனடியாக அரசுக்கு தெரிவிக்கப்பட்டதால், மிரட்டப்பட்டார் என்று செய்தி வெளியாகின.

இதையடுத்து தற்போது Li Wenliang பொலிசாரால் எச்சரிக்கப்பட்ட கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. இது போன்ற வைரஸ் பாதிப்பு இருப்பதாக Li Wenliang சீனாவின் சமூகவலைத்தளமான Weibo-யில் பகிர்ந்துள்ளார்.

இதைக் கண்ட வுஹான் நகர பொலிசார், அவரை எச்சரித்துள்ளனர். அதில் சமூகவலைத்தளங்களில் தேவையில்லாமல் பொய்யான தகவல்கள் பரப்புவதை நிறுத்தும்மாறும் இது ஒரு சட்டவிரோதமான செயல் என்று கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதில் Li Wenliang கருத்துக்களை வற்புறுத்தினாலோ, மனந்திரும்ப மறுத்து, சட்டவிரோத செயலைத் தொடர்ந்தாலோ, நீங்கள் சட்டத்தால் தண்டிக்கப்படுவீர்கள். உங்களுக்கு புரிகிறதா? என்று குறிப்பிட்டிருந்ததாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

அதன் பின் மீண்டும் மருத்துவமனைக்கு வழக்கம் போல் வேலைக்கு சென்ற Li Wenliang கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா வைரஸ் பாதிப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கடிதம் கடந்த 3-ஆம் திகதி அவருக்கு அனுப்பப்பட்டதாகவும், அதில் மருத்துவரின் கையெழுத்தும் இருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதம் இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், சீன மக்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவரின் தயார் கூறுகையில், இந்த வைரஸ் குறித்து என் மகன் தவறாக தகவல் பரப்புவதாக கூறி, நள்ளிரவில் வுஹான் பொலிசாரால் காவல்நிலையத்தில் அழைக்கப்பட்டான். அப்போது அவர்கள் எங்களுக்கு சரியான விளக்கம் கொடுக்காவிட்டால், சும்மா விடமாட்டோம் என்று கூறியதாக தெரிவித்தார்.

டிசம்பர் 30-ஆம் திகதி என் மகன் சார்ஸ் வைரஸ் போன்று ஏழு பேருக்கு ஒரு பாதிப்பு இருப்பதாகவும், ஆனால் எது என்ன வைரஸ் என்பது தெரியவில்லை என்று தனியாக ஒரு வெப் சேட் குழுவில் குறிப்பிட்டிருந்தான். அந்த பரிமாற்றத்தின் ஸ்கிரீன் ஷாட் எப்படியோ லீக் ஆனதால், அவன் பொலிசாரால் அழைக்கப்பட்டும் கண்டிப்பதாக கண்ணீருடன் தெரிவித்தார்.

இது குறித்து முதலில் மறுத்த சீன அரசு அதன் பின் இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டது, அதுமட்டுமின்றி அவரது மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்