கொரோனா தடுப்பூசிக்காக 1 மில்லியன் யுவான் தர தயார்: ஜாக்கிசான் அறிவிப்பு!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 1 மில்லியன் யுவானை நிதியளிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் சீன நகரமான வுஹானில் வெடித்ததில் இருந்து, 25 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. ஹூபே மாகாணத்தில் மட்டும் 780 க்கும் மேற்பட்ட இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, உலகளவில் 37,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கி சான், சீன நகரமான வுஹானைத் தாக்கிய கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி ஒன்றை உருவாக்குவதற்காக, 1 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் ஒரு கோடி) செலுத்த தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

"வைரஸைத் தோற்கடிக்க விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முக்கியம், என்கிற ஒரே மாதிரியான எண்ணம் என்னைப் போன்ற பலருக்கும் இருப்பதாக நான் நம்புகிறேன். விரைவில் ஒரு மாற்று மருந்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன்" என கூறினார்.

Credits: Willy Sanjuan

மேலும், "எனக்கு இப்போது ஒரு 'மிகவும் எளிமையான' யோசனை உள்ளது. எந்த தனிநபரோ அல்லது அமைப்போ மருந்தை உருவாக்கினால், அவர்களுக்கு 1 மில்லியன் யுவானுடன் நன்றி சொல்ல விரும்புகிறேன்".

தனது அறிவிப்பு பணத்தைப் பற்றியது அல்ல என்று குறிப்பிட்ட ஜாக்கிசான், தனது தோழர்களில் சிலர் இறக்கும் வரை ஒரு வைரஸை எதிர்த்து போராடுவதை பார்க்க விரும்பவில்லை எனவும், அவர்கள் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்