வெளிநாட்டில் கணவன்! பரிதாப நிலையில் மனைவி... கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தாயான செவிலியர்கள்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆறு மாத ஆண் குழந்தையின் பெற்றோர் அவனருகில் இல்லாத சூழ்நிலையில் மருத்துவமனை செவிலியர்களே பெற்றோர் ஸ்தானத்தில் குழந்தையை கவனித்து கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் wuhan நகரை சேர்ந்த Le Le என்ற ஆறு மாத குழந்தையே இவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.

Le Le-ன் தந்தை வெளிநாட்டில் உள்ள நிலையில், அவன் தாய்க்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் குழந்தை Le Le-ஐ கவனித்து கொள்ள ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனை செவிலியர்களே Le Le-க்கு தாய், தந்தையாக மாறியுள்ளனர்.

அதாவது குழந்தையை தூங்கவைப்பது, அவனுடன் விளையாடுவது, உணவு ஊட்டுவது போன்ற விடயங்களை செவிலியர்கள் செய்து வருகின்றனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்