தாய்லாந்து கோரம்: துப்பாக்கி ஏந்தியவர் உட்பட 27 பேர் பலி, 57 பேர் காயம்... காரணத்தை வெளியிட்ட பிரதமர்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தாய்லாந்து வணிகவளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் தாக்குதல்தாரி உட்பட 27 பேர் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

தாய்லாந்தில் கோரத் என்றும் அழைக்கப்படும் நகோன் ராட்சாசிமா நகரின் மையத்தில் உள்ள டெர்மினல் 21 வணிக வளாகத்தில், நேற்று 32 வயதான ஜக்ரபந்த் தோம்மா என்கிற இராணுவ மேஜர் பொதுமக்கள் மீது சரமாரி துப்பாக்கி சூடு நடத்தினார்.

இந்த சம்பவமானது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று நீண்ட நேர போராட்டத்திற்கு பின் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் காயாமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா, வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், தாக்குதல் நடத்தியவர் உட்பட குறைந்தது 27 பேர் உயிரிழந்ததாகவும், 57 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு வீட்டை விற்பனை செய்வதில் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக துப்பாக்கிதாரி தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்