கொரோனாவல் சீனாவில் கருணை கொலை செய்யும் நிலை உள்ளது! ஊர் திரும்பிய தமிழர் சொன்ன அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பலரை கருணை கொலை செய்யும் அளவுக்கு நோயின் தாக்கம் கடுமையாக உள்ளது என்று அங்கிருந்து நாடு திரும்பிய தமிழகத்தை சேர்ந்த நபர் வேதனையுடன் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, சீனாவில் இருக்கும் வெளிநாட்டினர் தங்கள் நாட்டிற்கு படையெடுத்து வருகின்றனர். அதன் படி சீனாவில் இந்தியன் ரெஸ்டாரெண்ட் என்ற உணவகம் நடத்தி வந்த தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கீழாமலை கிராமத்தை சேர்ந்த கேசவன் (46) என்பவர் நேற்றும் முன் தினம் சொந்த ஊருக்கும் திரும்பியுள்ளார்.

அவர் சீனாவின் தற்போதைய நிலை குறித்து கூறுகையில், சீனாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு தொழில் மற்றும் வேலையில் இருந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு 2 மாதங்களாக பலரை பலி கொண்டுள்ளது.

இப்போது வரை அங்கிருக்கும் அனைத்து ஊர்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்களும் அரசின் மறு அறிவிப்பு வரும் வரை திறக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விசா காலம் முடிந்தும் சீனாவில் இருக்கும் இந்தியர்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேற வழி தெரியாமல் உள்ளனர். இந்திய தூதரகமும் கைவிரித்து விட்டது.

Photo Credit/ Dinakaran

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான இந்தியர்கள், சீனா தண்டனை கொடுத்து சிறைக்கு அனுப்பினால் கூட பரவாயில்லை எனக்கூறி அங்கேயே உள்ளனர்.

அனைவரையும் காப்பாற்றி மத்திய அரசு இந்தியா அழைத்து வர முன்வர வேண்டும். ஹொங்ஹொங், மக்காவ் போன்ற அண்டை நாடுகள் தங்களது எல்லையை மூடிவிட்டன.

சீனாவில் இருந்து யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. சீனாவில் ரயில், விமான சேவை பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது. மார்க்கெட் அனைத்திலும் எவ்வித அசைவ உணவுகளையும் இருப்பு வைக்க கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, கிட்டத்தட்ட 20 ஆயிரம் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளை சீன அரசு கருணை கொலை செய்யும் அளவுக்கு நோயின் தாக்கம் கடுமையாக உள்ளது. கடந்த 2 மாதத்தில் மட்டும் எனது தொழிலில் லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்