தாய்லாந்தில் நேரலையில் துப்பாக்கிச்சூடு நடத்தி பலரை கொன்ற கொலைகாரன் சுட்டுக்கொலை! சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் எந்திரத்துப்பாக்கியால் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய இராணுவ வீரர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

தாய்லாந்தின் நகோன் ராட்சாசிமா நகரில் இராணுவ மேஜர் ஜக்ராபந்த் தோமா முதலில் தனக்கு கட்டளையிடும் அதிகாரியை சுட்டு கொன்றார்.

இராணுவ முகாமில் இருந்து எந்திரத்துப்பாக்கியை திருடிய பின்னரே அவர் தாக்குதலை தொடங்கினார்.

பின்னர் அங்குள்ள வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்திய தோமா அப்பாவி மக்களை நோக்கி சரமாரியாக சுட்டான்.

இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் 21 பேர் உயிரிழந்ததாகவும், 40 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையில் தாக்குதல்தாரி தோமா துப்பாக்கியுடன் நடந்து வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

இந்த சூழலில் வணிக வளாகத்தில் பதுங்கியிருந்த தோமாவை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டு கொன்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி சூட்டை நேரலையில் பேஸ்புக்கில் தோமா ஒளிப்பரப்பிய நிலையில் அந்த பதிவில், நான் பொலில் சரண்டர் ஆக வேண்டுமா என கேட்டுள்ளான். இதோடு நான் மிகவும் சோர்வடைந்துவிட்டேன், இனியும் என் விரல்களை என்னால் அசைக்க முடியாது என கூறியுள்ளான்

அவரின் பதிவுகளை பேஸ்புக் நீக்கியுள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்து பேஸ்புக் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்