பாஸ்போர்ட்டை கடித்துக் குதறிய நாய்... நன்றி கூறிய உரிமையாளர்: காரணம் என்ன தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தைவான் நாட்டவரான பெண் ஒருவர் தனது பாஸ்போர்ட்டை மென்று தின்றதற்கும், சீனா பயணத்தைத் தகர்த்ததற்கும் காரணமான தனது நாய்க்கு நன்றி தெரிவித்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி தைவான் நாட்டவரான பெண்மணி ஒருவர் தமது பேஸ்புக் பக்கத்தில், கந்தலான அவரது பாஸ்போர்ட்டின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், குடியிருப்புக்கு திரும்பிய எனக்கு காணக்கிடைத்த காட்சி இது என குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, ஹூபே மாகாணத்தின் வுஹான் நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், தற்போது தமது திட்டம் முற்றாக முடங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதன் பின்னரே அவருக்கு தெரிய வந்தது, வுஹான் நகரம் கொரோனா வியாதியால் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது என்று.

ஞாயிறன்று வெளியான தகவலின்படி சீனா முழுவதும் 56 பேர் கொரோனா வியாதிக்கு கொல்லப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் 2,000 பேர் இந்த வியாதிக்கு இரையாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

தற்போது கந்தலான பாஸ்போர்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அந்த தைவான் பெண்மணி, எனது செல்ல நாயால் காப்பாற்றப் பட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தைவான் பெண்மணி வுஹான் நகருக்கு பயணப்பட முடிவு செய்திருந்த நாளிலேயே முதன் முறையாக கொரோனா பாதிப்பு தொடர்பில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்