காட்டுத்தீயாக பரவும் கொரோனா வியாதி: சீனாவில் இனி இந்த இரண்டு உணவுகளுக்கு தடை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் கோர தாண்டவமாடும் கொரோனா வியாதி காரணமாக வனவிலங்கு விற்பனைக்கு அதிரடி தடை விதித்து வேளான் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உணவுக்காக உட்கொள்ளும் காட்டு விலங்குகளே இந்த கொடிய வியாதிக்கு முக்கிய காரணம் என நம்பப்படுகிறது.

சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள் மற்றும் ஈ-காமர்ஸ் தளங்களில் வனவிலங்குகளின் வர்த்தகத்தையும் அமைச்சகம் தடை செய்துள்ளது.

இதுபோன்ற விலங்குகளை வளர்க்கும் அனைத்து இடங்களுக்கும் தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளது என்று வனத்துறையுடன் இணைந்து ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் தொழில்துறை நகரமான வுஹானில் உள்ள இரண்டு கடல் உணவு சந்தைகளே கொரோனா வியாதியின் தொடக்க புள்ளியாக இருந்து என நம்பப்படுகிறது.

சமீபத்திய தகவலின்படி சீனாவில் 50 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வியாதிக்கு பலியாகியுள்ளனர்.

இந்த கொடூர வியாதியானது முதலில் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது மற்றும் மனிதர்களிடையே சில நிமிடங்களில் பரவுகிறது.

மனிதர்களுக்கு நோய்த்தொற்றை பரப்பிய சரியான விலங்கு இனங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை,

பொதுவாக சீன மக்கள் ஆர்வமாக எடுத்துக் கொள்ளும் வெளவால்கள் மற்றும் பாம்பு உணவுகள் சாத்தியமானவையாக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளன.

வனவிலங்குகளை உள்ளடக்கிய உணவுகள் சீனாவின் பல பகுதிகளில் நல்ல வரவேற்பு பெற்ற உணவாக கருதப்படுகின்றன.

பீஜிங் போன்ற பெரிய நகரங்களில் அவை மெதுவாக ஆர்வம் குறைந்து காணப்படுகின்றன. ஆனால் சில மாகாணங்களில் தேவை ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது என தெரியவந்துள்ளது.

2002-2003 SARS தொற்றுநோய்களுக்குப் பிறகு இந்த நடைமுறையைத் தடுக்கத் தவறியது குறித்து சீனா மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

குறித்த நோயானது தெற்கு நகரமான குவாங்சோவில் காட்டு விலங்குகளின் நுகர்வு மூலம் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது.

அந்த கொடிய வியாதி 17 நாடுகளில் 8,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு பரவியது, அவர்களில் 800 பேர் கொல்லப்பட்டனர்.

தற்போது தீயாக பரவும் கொரோனா வியாதியை கட்டுப்படுத்த சீன அரசு சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

11 மில்லியன் மக்கள் வசிக்கும் வுஹான் நகரம் முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் முழு ஹூபே மாகாணத்திலும் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்