கொரோனா கோரதாண்டவம்: உலகின் பரபரப்பான விமான நிலையத்தின் தற்போதைய நிலை தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான பீஜிங் சர்வதேச விமான நிலையம் கொரோனா வியாதி காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.

சீனாவை மொத்தமாக புரட்டிப்போட்டுள்ள கொடிய வியாதி காரணமாக முக்கிய நகரங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் நேரப்படி நேற்று மாலை தொடங்கி உலகின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான பீஜிங் சர்வதேச விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாங்காங் பயணி ஒருவர் இது தொடர்பாக வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் கொரோனா பாதிப்புகள் குறித்து அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

விமான ஊழியர்களும் மருத்துவ முகமூடி அணிந்தே பணியாற்றுகின்றனர்.

பீஜிங் சர்வதேச விமான நிலையமானது கடந்த 2010 முதல் ஒவ்வொரு ஆண்டும் உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக தரவரிசைப்படுத்தப்படுகிறது.

பொதுவாக ஒரு வருடத்தில் 90 முதல் 100 மில்லியன் பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

சூசன் என்ற அந்த பயணி, பீஜிங் விமான நிலையத்தை இந்த கோலத்தில் பார்ப்பது என்பது ஏதோ பேய் படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது என்கிறார்.

தாம் வந்த விமானத்தின் பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக இருந்தது எனக் கூறும் சூசன்,

விமானம் தரை இறங்கியதும் உரிய மருத்துவ குழுக்களால் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது என்கிறார்.

தாய்லாந்தில் இருந்து தாம் பீஜிங் வந்துள்ளதாக கூறும் சூசன், சீனாவுக்கு செல்லும் ஒவ்வொரு விமானமும் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி சீனாவின் தலைநகரமே வெறிச்சோடி காணப்படுவதாக கூறும் அவர், சாலைப் போக்குவரத்தும் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை காலியாகவே உள்ளது என்கிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்