சாலையில் குளித்துக்கொண்டே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளைஞர்கள்: வைரல் வீடியோ!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இரண்டு வியட்நாம் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பயணித்தபடியே குளித்துக்கொண்டு செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வியட்நாமை சேர்ந்த 23 வயதான ஹுய்ன் தன் கான் என்கிற இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய நண்பருடன், இருசக்கர வாகனத்தில் குளித்துக்கொண்டே பயணம் செய்துள்ளார்.

வேடிக்கையாக எடுக்கப்பட்ட இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலானதை அடுத்து, காவல்துறையினரின் கவனத்திற்கு சென்றடைந்தது.

இதனையடுத்து வண்டியின் எண்ணை கொண்டு பொலிஸார் அவர்கள் இருவரையும் கண்டுபிடித்தனர். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல், பின்புற பார்வை கண்ணாடிகள் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் செல்வது மற்றும் சிவில் காப்பீட்டு சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல போக்குவரத்து விதிகளை மீறியதற்காக இருவருக்கும் 1.8 மீ வியட்நாமிய டோங் (ரூ .5,500) அபராதம் விதிக்கப்பட்டது.

கானுக்கு பைக்கை வழங்கிய நபருக்கு, தகுதியற்ற ஓட்டுநருக்கு வாகனம் கொடுத்த குற்றத்திற்காக 1.4 மீ டாங் (ரூ .4,300) அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்