தடபுடலாக நடந்த திருமணத்தில் குண்டு வீச்சு தாக்குதல்: குழந்தைகள் உட்பட 20 பேர் காயம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வின் போது கையெறி குண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் எல்லையான கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில், சனிக்கிழமை இரவு நடைபெற்ற திருமண நிகழ்வில் மர்ம நபர் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்திருப்பதாக காவல்துறைத் தலைவரின் செய்தித் தொடர்பாளர் அடெல் ஹைதர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு யாரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. தாக்குதலுக்குப் பின்னால் தலிபான்கள் இருந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, இருப்பினும் அவர்கள் அப்பகுதியில் வலுவான இருப்பைக் கொண்டிருக்கின்றனர்.

காயமடைந்த திருமண விருந்தினர்கள் அனைவரும் ஆண்கள், ஆனால் தாக்குதலில் மணமகன் காயமடைந்தாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று ஹைதர் கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்