கொரோனா வைரஸால் துடி துடிக்கும் நபர்! சீனாவில் கோரதாண்டவத்தை காட்டும் பதபதக்க வைக்கும் காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் துடி துடிக்கும் வீடியோ காட்சி வெளியாகி அந்த நோயின் தாக்கத்தை காட்டுவது பார்ப்போர் பலரையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது சீனாவில் அதிகரித்து வருகிறது. நாட்கள் செல்ல, செல்ல இறப்புகளும் அதிகரித்து வருகிறது.

தற்போது வரை இந்த நோயின் பாதிப்பினால் 56 பேர் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வுஹான் மாகாணத்தில் இருக்கும் மருத்துவமனையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் படுக்கையில் வைத்து அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அப்போது பாதிக்கப்பட்ட நபர் அந்த நோயின் தாக்கத்தினால் துடி துடிக்கிறார், அப்போது அருகில் இருக்கும் பலரும் முகத்தில் மாஸ்க்கை போட்டுக் கொண்டு அவரை ஒரு வித பரிதாபத்துடன் பார்க்கின்றனர்.

ஆனால் யாரும் அவரின் உடல் அசைவை கட்டுப்படுத்த வரவில்லை, ஒரு பெண் மட்டுமே அவர் உடலில் அதுவும் போர்வை போர்த்தப்பட்ட நிலையில், கட்டுப்படுத்த முயல்கிறார்.

ஏனெனில் குறித்த நோயானது ஒருவரிடமிருந்து, மற்றொருவருக்கு பரவுவதால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனி அறையில் வைக்கப்பட்டே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்