கொரோனா வைரஸிற்கான மருந்துகளை வெளியிட்டது சீனா! உலகையே கதிகலங்க வைக்கும் கொடிய நோய்

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸால் ஏற்படும் நிமோனியாவுக்கு தற்காலிக சிகிச்சையாக AbbVie Inc’s-ன் எச்.ஐ.வி மருந்துகளை பயன்படுத்துவதாக சீனா தரப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நோயை குணப்படுத்துவதற்கான உலகளாவிய ஆராய்ச்சி தொடர்கிறது.

சீனாவில் கொரோனா வைரஸால் குறைந்தது 56 பேர் உயிரிழந்தனர் மற்றும் உலகளவில் 2,000 க்கும் அதிகமானோர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம், AbbVie Inc’s கலேத்ரா என்ற பிராண்ட் பெயரில் விற்க்கப்படும் லோபினாவிர் மற்றும் ரிட்டோனாவிர் ஆகியவற்றின் கலவையான மாத்திரைகள், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான சமீபத்திய சிகிச்சை திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த எந்தவொரு பயனுள்ள வைரஸ் எதிர்ப்பு மருந்தும் இதுவரை இல்லை.

என்றாலும், நோயாளிகளுக்கு இரண்டு லோபினாவிர் மற்றும் ரிடோனாவிர் மாத்திரைகள் ஒரு நாளைக்கு இரண்டு முறை மற்றும் ஆல்பா-இன்டர்ஃபெரானை ஒரு நாளைக்கு இரண்டு முறை நெபுலைசேஷன் மூலம் வழங்குமாறு பரிந்துரைப்பதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ரிட்டோனாவிர் மற்றும் லோபினாவிர் ஆகியவற்றைப் பயன்படுத்தி மருத்துவ பரிசோதனை நடந்து வருவதாக மருத்துவ இதழான லான்செட் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஒரு தடுப்பூசியை உருவாக்கத் தொடங்கியுள்ளதாக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நோயாளிகளை பரிசோதிக்க வுஹானுக்குச் சென்றபின் வைரஸால் பாதிக்கப்பட்ட பெய்ஜிங்கில் உள்ள பீக்கிங் பல்கலைக்கழக மருத்துவமனையின் சுவாச நிபுணர் வாங் குவாங்பா, புதிய வைரஸை எதிர்த்துப் போராட எச்.ஐ.வி மருந்துகளை எடுத்துக்கொள்ளுமாறு தனது மருத்துவர் பரிந்துரைத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்