தனி விமானம் வருகிறது! தப்பிச்சு கோங்க...சீனாவில் இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் சிக்கி தவிக்கும் அமெரிக்கர்களை மீட்க, தனி விமானம் ஒன்றை அரசு அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரம் மற்றும் சில குறிப்பிட்ட நகர்களில் கொரோனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால், அங்கிருக்கும் மக்கள் தற்போதைக்கு வெளியேற வேண்டாம் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனோ வைரஸ் பாதிப்பால், 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடங்கள் தெரிவித்துள்ளன.

வேகமாக அடுத்தடுத்து பரவி வருவதால், சீனாவில் புதிததாக இரண்டு மருத்துவமனையிகள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி, அமெரிக்கா, கொரிய, பிரான்ஸ், கனடா, இந்தியா மற்றும் இன்னும் சில நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதால், உலக நாடுகள் பீதியில் உள்ளனர். அங்கிருக்கும் வெளிநாட்டினர் பலரும் போக்குவரத்து வசதி நிறுத்தப்பட்டதால், தங்கள் நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீனா கொரோனோ வைரஸ் பாதிப்பால் சிக்கியுள்ளது. இதனால் அங்கிருக்கும் அமெரிக்க தூதர்கள் மற்றும் அமெரிக்கர்கள் அங்கிருந்து அழைத்து வர ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது,

அதாவது வரும் 28-ஆம் திகதி சீனாவில் இருக்கும் Wuhan Tianhe சர்வதேச விமானநிலையத்தில் இருந்து, அமெரிக்காவின் san francisco-வுக்கு ஒரு தனி விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இதை அமெரிக்கர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இதற்காக உங்கள் பாஸ்போர்ட் எண், பெயர், பிறந்த தேதி போன்றவைகளை விண்ணப்பித்து, குறிப்பிட்ட இணையதளம் ஒன்றிற்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்