உலகை மிரட்டும் கொரனோ வைரஸ்! பாதிக்கப்பட்டவர்கள் எப்படி இருக்கின்றனர்? வெளியான புகைப்படங்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.

சீனாவின் வுஹான் மாகாணத்தில், உயிர் கொல்லி நோயான கொரோனா வேகமாக பரவி வருவதால், தற்போது வரை இந்த நோயின் காரணமாக 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்திருப்பதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் நல்ல நிலையில், இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

(Picture: Reuters; AP)

இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று, வுஹான் மாகாணத்தில் இருக்கும் மருத்துவமனையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் எப்படி கண்காணித்து வருகின்றனர், உதவுகின்றனர் என்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

(Picture: THE CENTRAL HOSPITAL OF WUHAN VIA WEIBO /via REUTERS)

அதில், தலை முதல் கால் வரை உடை அணிந்திருக்கும் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர். அவர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர்.

(Picture: THE CENTRAL HOSPITAL OF WUHAN VIA WEIBO /via REUTERS)

மேலும் இப்படி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செவிலியர் உதவிய போது, அவருக்கும் இந்த நோயின் தாக்கம் ஏற்பட்டுவிட்டதாகவும், அவர் ஏழு மாத கர்ப்பிணி பெண் எனவும், அவரை மட்டுமின்றி அவருடைய 70 வயதான தாயுக்கும் கொரோனோ வைரஸின் பாதிப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

(Picture: THE CENTRAL HOSPITAL OF WUHAN VIA WEIBO /via REUTERS)

(Picture: THE CENTRAL HOSPITAL OF WUHAN VIA WEIBO /via REUTERS)

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்