உலுக்கிய நிலநடுக்கம்! உயிருடன் வந்த குழந்தை: சவப்பெட்டியை சுமந்துச் சென்ற ஜனாதிபதியின் நெகிழ்ச்சி வீடியோ

Report Print Basu in ஏனைய நாடுகள்

துருக்கில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்த தாய்-மகன் இறுதிச்சடங்கில் அந்நாட்டு ஜனாதிபதி கலந்துக்கொண்டு உடலை சுமந்து சென்றது நெகிழ வைத்துள்ளது.

நேற்று இரவு 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உள்ளுர் மசூதிகள், பள்ளிகள், விளையாட்டு அரங்குகள் மற்றும் மாணவர் தங்குமிடங்கள் இடிந்து விழுந்து நூற்றுக்கணக்கானோர் வீடற்ற நிலையில் உள்ளனர்.

துருக்கில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 29 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1200 பேர் காயமடைந்தனர்.

கிழக்கு துருக்கியில் நேற்றிரவு முதல் இடிபாடுகளில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்பதற்காக மீட்புத் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் இஸ்தான்புல்லில் தனது நிகழ்வுகளை ரத்து செய்து மீட்பு முயற்சிகளை ஆய்வு செய்ய எலாசிக் சென்றார்.

ஜனாதிபதி எர்டோகன் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பூகம்பத்தில் கொல்லப்பட்ட தாய் மற்றும் மகனின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.

பூகம்பங்களுக்கு நாடு தயாராக இல்லை என்பது குறித்து எதிர்மறையாக பரவி வரும் வதந்திகளை எதிர்த்து மக்களை எச்சரித்தார்.

எர்டோகன் கூறியதாவது, வதந்திகளுக்கு செவிசாய்க்காதீர்கள், யாருடைய எதிர்மறையான மற்றும் மாற்று பிரச்சாரம் செய்பவர்களுக்கு செவிசாய்க்காதீர்கள். நாங்கள் உங்கள் ஊழியர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இது துருக்கிக்கு வந்துள்ள சோதனை என்று விவரித்தார்.

நாங்கள் மாநிலமாகவும் தேசமாகவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், நாங்கள் தொடர்ந்து செய்வோம்.

அனைத்து மீட்பு தளங்களிலும் எங்கள் முயற்சிகள் தொடரும், என்று இறுதிச் சடங்கில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி எர்டோகன் கூறினார்.

கிழக்கு மாகாணமான எலாசிக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த மூன்று வயது சிறுமி, 24 மணிநேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்க்கப்பட்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்