அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் வார்த்தை மோதல்..! பேச்சுவார்த்தை வேண்டாம்.. டிரம்ப் அதிரடி

Report Print Basu in ஏனைய நாடுகள்

அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம் சற்று குறைந்துள்ள நிலையில் டிரம்ப்-ஸரீப் வார்த்தை மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரான்-அமெரிக்கா நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஈரான் தயாராக உள்ளதாக என ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், பொருளாதார தடைகளை நீக்க வேண்டுமாம்.

பேச்சுவார்த்தை வேண்டாம் நன்றி! என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ட்விட்டரில் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டிரம்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஸரீப் ட்விட்டரில் பதிவிட்டதாவது, டிரம்ப், அவரது வெளியுறவுக் கொள்கை கருத்துகள் மற்றும் முடிவுகளை உண்மைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பது நல்லது.

மாறாக FoxNews தலைப்புச் செய்திகள் அல்லது அவரது ஃபார்ஸி மொழிபெயர்ப்பாளர்களை அடிப்படையாகக் கொண்டிருக்ககூடாது என விமர்சித்துள்ளார்.

நேர்காணலின் போது, சுலைமானி படுகொலையை தொடர்ந்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை நீங்கள் நிராகரிக்கிறீர்களா என கேட்க்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜாவத், இல்லை, மக்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றி உண்மைகளை அங்கீகரிப்பதற்கான வாய்ப்பை நான் ஒருபோதும் நிராகரிக்கவில்லை.

எங்களைப் பொறுத்தவரை, வெள்ளை மாளிகையில் யார் அமர்ந்திருந்தாலும் பரவாயில்லை.

அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். டிரம்ப் நிர்வாகம் அதன் கடந்த காலத்தை தவறுகளை சரிசெய்து, பொருளாதாரத் தடைகளை நீக்கிவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவும் முடியும்.

நாங்கள் இன்னும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். அவர்கள் தான் வெளியேறினர்.

அமெரிக்கா ஈரானிய மக்களுக்கு பெரும் தீங்கு விளைவித்தது. அதற்கு அவர்கள் ஈடுசெய்ய வேண்டிய நாள் வரும். எங்களுக்கு நிறைய பொறுமை இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்