கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சையளித்த மருத்துவர் இறந்ததாக பரவிய செய்தி... வெளிச்சத்திற்கு வந்த உண்மை காரணம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

சீனாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக பரவி செய்தி தொடர்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 62 வயதான மருத்துவர் லியாங் வுடோங், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என தகவல்கள் பரவின.

கொரோனா வைரஸின் பரவலை எதிர்த்துப் போராடும் மருத்துவ குழுவில் முக்கிய பங்காற்றிய மூத்த மருத்துவர் லியாங் வுடோங் என கூறப்பட்டது.

வுஹான் நகரில் உள்ள ஹூபியின் சின்ஹுவா மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் லியாங் வுடோங் உள்ளுர் நேரப்படி ஜனவரி 25ம் திகதி காலை 9.12 மணியளவில் உயிரிழந்தார் எள தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சனிக்கிழமை கொரோனா வைரஸால் இறந்ததாக சந்தேகிக்கப்படும் மருத்துவர் லியாங் வுடோங், மார்ச் 2019ல் ஓய்வு பெற்றார் என மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வமான தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவர் லியாங்கிற்கு இதய நோய் இருந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் கொரோனா வைரஸால் இறக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்