20 வயதில் கோடீஸ்வரியாகி 21 வயதில் அனைத்து பணத்தையும் இழந்த பெண்! காரணம் என்ன தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நடிகையும், மொடலுமான மின்னி ஜோன்ஸ் 20 வயதில் கோடீஸ்வரியாக ஆகி 21 வயதில் அனைத்து பணத்தையும் இழந்தது தெரியவந்துள்ளது.

ஜோனஸ்பெர்க்கை சேர்ந்தவர் மின்னி ஜோன்ஸ். இவர் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.

அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், என்னுடைய 20 வயதில் லிஜிட் என்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன்.

அதில் எனக்கு கோடிகளில் பணம் பரிசாக கிடைத்தது.

ஆனால் அடுத்த வருடமே என்னுடைய 21வது வயதில் என்னுடய தவறான செலவுகளால் அனைத்து பணத்தையும் இழந்தேன்.

இது எனக்கு வாழ்கையில் பாடத்தை கற்று கொடுத்தது.

இதன் பின்னர் சரும பராமரிப்பு தொடர்பான தொழிலை தொடங்கினேன், நடித்து கொண்டே தொழிலை கவனித்து வருகிறேன்.

தற்போது வாழ்க்கை நன்றாக செல்கிறது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்