சீனாவில் இருந்து இலங்கை வந்த சிறுவனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா? வெளியான உண்மை தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சீனாவை சேர்ந்த சிறுவன் இலங்கைக்கு வந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கலாம் என அச்சம் ஏற்பட்ட சூழலில் வைரஸ் பாதிப்பில்லை என தெரியவந்துள்ளது.

இந்த தகவலை சுகாதார துறை அமைச்சர் Pavithra Wanniarachchi பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலை சஜித் கொரோனா வைரஸ் தொடர்பிலான கேள்வியை கேட்ட நிலையிலே அமைச்சர் அந்த பதிலை கொடுத்தார்.

இதோடு இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் Katunanayake விமான நிலையத்துக்கு வந்து இறங்கும் பயணிகளுக்கு இது தொடர்பான பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் விமான நிலையத்தில் மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளதாகவும் Pavithra Wanniarachchi கூறியுள்ளார்.

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலில் 41 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்