கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவருக்கு நேர்ந்த கதி.! அதிகரிக்கும் பீதி

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பீதியை அதிகரித்துள்ளது.

சீனாவில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 62 வயதான மருத்துவர் லியாங் வுடோங், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என்று அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் பரவலை எதிர்த்துப் போராடும் மருத்துவ குழுவில் முக்கிய பங்காற்றிய மூத்த மருத்துவர் லியாங் வுடோங் என்று சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வுஹான் நகரில் உள்ள ஹூபியின் சின்ஹுவா மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் லியாங் வுடோங் உள்ளுர் நேரப்படி ஜனவரி 25ம் திகதி காலை 9.12 மணியளவில் உயிரிழந்தார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்த முதல் மருத்துவர் வுடோங் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் முதன் முதலாக வுஹான் நகரில் தோன்றிய நிலையில், அந்நகரம் உட்பட நாட்டில் நோய் பரவிய நகரங்களுக்கு செல்லவும், அங்கிருந்து வெளியேறவும் சீனா அரசாங்கம் தடை விதித்துள்ளது. மேலும், அந்நகரங்களுக்கான அனைத்து விதமான போக்குவரத்தையும் நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், மற்ற மாகாணங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்து வுஹான் நகரில் பணியாற்றி வந்தவர்கள், தற்போது நகரத்தை விட்டு வெளியேற முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்