உக்ரைன் விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தால் பல உண்மைகள் தெரியவரும்! இந்த சூழலில் ஈரான் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் கருப்பு பெட்டியை உக்ரைனுக்கு எப்போதும் அனுப்ப போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஈரான்- அமெரிக்கா இடையே போர் பதட்டம் நிலவிய சூழலில், உக்ரைன் விமானத்தை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது.

இதில் விமானத்தில் பயணம் செய்த 176 பயணிகளும் பலியானார்கள்.

அமெரிக்க போர் விமானம் என கருதி தவறுதலாக உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக்கொண்டது. இது சர்வதேச அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விமானத்தில் இருந்த கருப்பு பெட்டி கிடைத்தால் இது தொடர்பில் பல்வேறு விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கருப்பு பெட்டியை தராமல் ஈரான் இழுத்தடித்து.

இந்நிலையில் ஈரான் தற்போது வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில் கீழே விழுந்த உக்ரைன் விமானத்தின் கருப்பு பெட்டிகளை உக்ரைனுக்கு அனுப்பப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்