எங்களின் விருப்பம் இதுதான்: திட்டவட்டமாக அறிவித்த ஈரானிய ஜனாதிபதி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
842Shares

போரைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈரான் அரசு தினமும் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தின் மீதான தாக்குதல், ஈரான் ராணுவ படைத்தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு இழப்பீடு என கருதுகிறோம் என குறிப்பிட்டுள்ள ரூஹானி,

போரைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈரான் அரசு தினமும் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்னும் சாத்தியக்கூறுகள் உள்ளன என கூறியுள்ளார்.

ஈரான் நாட்டில் வரும் பிப்ரவரி மாதம் 21 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போது ஈரானில் நிலவி வரும் சூழ்நிலையில் ஜனாதிபதி ரூஹானிக்கு இந்த தேர்தல் மிகவும் சவாலாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்