கசிந்தது..! ஜனாதிபதியை இழிவாக பேசிய பிரதமரின் ஓடியோ..! நெருக்கடியால் ஹான்சரூக் எடுத்த அதிரடி முடிவு

Report Print Basu in ஏனைய நாடுகள்
97Shares

உக்ரேனிய ஜனாதிபதிக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது என்று பேசிய ஓடியோ டேப்பில் சிக்கிய சில நாட்களுக்குப் பிறகு, அந்நாட்டு பிரதமர் தனது ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார்.

பேஸ்புக் பதிவில், உக்ரேனிய பிரதமர் ஒலெக்ஸி ஹான்சரூக் தனது ராஜினாமாவை ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கியிடம் வழங்கியதாகக் கூறினார்.

ஜனாதிபதியின் திட்டத்தை செயல்படுத்த நான் இந்த பதவியை ஏற்றேன். அவர் எனக்கு வெளிப்படைத்தன்மை மற்றும் கண்ணியத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

இருப்பினும், ஜனாதிபதியின் மீதான எங்கள் மரியாதை மற்றும் நம்பிக்கை குறித்த எந்த சந்தேகத்தையும் அகற்றுவதற்காக, ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தேன் என்று ஒலெக்ஸி ஹான்சரூக் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ராஜினாமாவை ஏற்கலாமா என்பது குறித்து உக்ரேனிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. ராஜினாமா கடிதம் கிடைத்ததை ஜனாதிபதி செலன்ஸ்கியின் அலுவலகம் உறுதிப்படுத்தியதுடன், ஜனாதிபதி அதை பரிசீலிப்பார் என்று தெரிவித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில் உக்ரைன் பிரதமர், நாட்டின் ஜனாதிபதி குறித்து இழிவாக பேசும் ஓடியோ ஒன்று கசிந்தது. அதில் செலன்ஸ்கியின் பொருளாதாரம் பற்றிய புரிதல் குறித்து ஹான்சரூக் இழிவான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இந்த ஓடியோ உண்மை இல்லை என்று வலியுறுத்திய பிரதமர் ஹான்ரூக், இது பதிவுசெய்யப்பட்ட அரசாங்கக் கூட்டங்களில் இருந்து எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும், ஜனாதிபதியை அவர் மதிக்கவில்லை என்பது போல் தோற்றமளிப்பதற்காக அடையாளம் தெரியாத செல்வாக்குமிக்க குழுக்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் ஹான்ரூக் குற்றம் சாட்டினார்.

வியாழக்கிழமை, உக்ரைன் எதிர்க்கட்சி பிரதமர் ஹான்சரூக் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரினர். அவரும் அவரது அமைச்சரவையும் உக்ரைனின் ஜனாதிபதியை இழிவுபடுத்துவதாகவும், நாட்டின் பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்துவதாகவும் கூறினார்.

இதனையடுத்தே, உக்ரைன் பிரதமர் ஒலெக்ஸி ஹான்சரூக் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்