176 பேர் படுகொலை..! ஈரானால் பாதிக்கப்பட்ட பிரித்தானியா, கனடா உட்பட 5 நாடுகள் கூட்டாக முக்கிய அறிக்கை

Report Print Basu in ஏனைய நாடுகள்
140Shares

ஈரானில் உக்ரேனிய விமான விபத்தில் பல குடிமக்களை இழந்த ஐந்து நாடுகள், கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கோரியுள்ளனர்.

ஈரானில் நடந்த உக்ரேனிய விமான விபத்தில் குடிமக்களை இழந்த கனடா, உக்ரைன், சுவீடன், ஆப்கானிஸ்தான் மற்றும் பிரித்தானியா ஆகிய 5 நாடுகளின் அதிகாரிகள் லண்டனில் விபத்து தொடர்பான சந்திப்பு கூட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டத்தின் முடிவில் ஐந்து நாடுகளுமு் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர் அதில், பாதிக்கப்பட்ட நாடுகள் குறித்து ஈரான் முழுமையான, சுயாதீனமான, வெளிப்படையான, சர்வதேச மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் செயல்முறையை முன்னெடுக்கவும், உடல்களை திருப்பித் தருமாறு அவர்களது குடும்பங்களின் கோரிக்கைகளுக்கு இணங்கவும், 5 நாடுகள் ஈரானுக்கு அழைப்பு விடுத்தன.

இன்று வரை ஈரானிய ஒத்துழைப்பை வரவேற்கிறோம் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஐந்து நாடுகள் கூட்டாக ஈரானை வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், 176 பேரைக் கொன்ற உக்ரேனிய விமான விபத்தில் சம்மந்தப்பட்ட அனைத்து நாடுகளும், இதை ஒரு அரசியல் பிரசினையாக மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

உக்ரேனிய விமான விபத்தில் குடிமக்கள் கொல்லப்பட்ட நாடுகளுடன், ஈரான் ‘ எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு ’ ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என்று செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்