உயிரிழந்த பெண்ணின் சடலத்தை தண்ணீரில் குளிப்பாட்டிய குடும்பத்தார்! அப்போது அவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
3942Shares

பாகிஸ்தானில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை குளிப்பாட்டும் போது அவருக்கு உயிர் இருப்பதை கண்டுபிடித்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கராச்சியை சேர்ந்தவர் ரஷிதா பிபி (50). இவருக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரஷிதா இறந்துவிட்டதாக கூறியதோடு, அதற்கான இறப்பு சான்றிதழையும் கொடுத்தனர்.

பின்னர் ரஷிதாவின் சடலத்தை உறவினர்கள் எடுத்து சென்று இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

அப்போது அதன் ஒரு பகுதியாக ரஷிதாவின் சடலத்தை தண்ணீரை கொண்டு குளிப்பாட்டினார்கள்.

அந்த சமயத்தில் ரஷிதாவின் கால்கள் அசைவதை அங்கிருந்த சிலர் பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள்.

இதையடுத்து அவரின் நாடியை பரிசோதித்த போது துடிப்பு இருந்தது தெரிந்தது. பின்னர் உடனடியாக ரஷிதாவை வேறு மருத்துவமனைக்கு குடும்பத்தார் கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்டது, தற்போது வரை ரஷிதாவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்