176 பேரின் உயிரை பறித்த உக்ரைன் விமான விபத்தில் புதிய திருப்பம்! அமெரிக்கா தொடர்பில் ஈரான் அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
637Shares

ஈரானில் உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க மின்னணுவியல் குறுக்கீடும் காரணமாக இருக்கலாம் என ஈரான் கருதுவதாக அந்நாட்டு இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஈரான்- அமெரிக்கா இடையே போர் பதட்டம் நிலவிய சூழலில், உக்ரைன் விமானத்தை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது.

இதில் விமானத்தில் பயணம் செய்த பெரும்பாலான 176 பயணிகளும் பலியானார்கள்.

அமெரிக்க போர் விமானம் என கருதி தவறுதலாக உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக்கொண்டது. இது சர்வதேச அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் அனைவரையும் தண்டிப்போம் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி அறிவித்தார்.

இந்நிலையில், உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க மின்னணுவியல் குறுக்கீடும் காரணமாக இருக்கலாம் என ஈரான் ஆயுதப்படை பொது தலைமையகத்தின் துணைத் தளபதி அலி அப்துல்லாஹி தெரிவித்துள்ளார்.

ஏவுகணையை வீசிய ஆபரேட்டருக்கு கட்டளை மையத்தின் செய்தியைப் பெறுவதில் சிரமம் இருந்தது.

அமெரிக்க மின்னணு (எலெக்ட்ரானிக்) கூறுகளின் குறுகீடு காரணமாக ஈரானின் ரேடார் நெட்வொர்க்கில் இடையூறு ஏற்பட்டிருக்கலாம்.

அத்தகைய சாத்தியத்தை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது என அலி அப்துல்லாஹி கூறியுள்ளார்.

176 பேரின் உயிர் பறிபோக ஈரான் தான் முழு காரணம் என கூறப்பட்ட நிலையில் அந்நாடு அமெரிக்காவை இந்த விவகாரத்தில் இழுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்