முக்கிய இடத்தை குறிவைத்து சரமாரி வான்வழித் தாக்குதல்..! பொறுப்பேற்றது இராணுவம்... மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்

Report Print Basu in ஏனைய நாடுகள்
1256Shares

தீமூட்டும் பலூன்கள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடக்கு காசா பகுதியில் ஹமாஸ் போராளி குழுவை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

தெற்கு இஸ்ரேலில் தீமூட்டும் பலூன்கள் விழுந்து வெடித்தவுடன், வெடிகுண்டு அகற்றும்ப் படை அனுப்பப்பட்டது.ஆனால் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என இஸ்ரேலிய பொலிசார் தெரிவித்தனர்.

இந்த பலூன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசாவில் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

தாக்குதல் காசாவின் ஆளும் ஹமாஸ் போராளிக்குழுவால் நிலத்தடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் உள்கட்டமைப்பை குறிவைத்தது நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும், காசாவில், வான்வழித் தாக்குதல் யாரும் இல்லாத பகுதியைத் தாக்கியதாக உள்ளுர் ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் காயங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

2018ம் ஆண்டு தொடங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் மோதலின் போது, ​​பாலஸ்தீனியர்கள் அடிக்கடி தீமூட்டும் பலூன்கள் மற்றும் காத்தாடிகளை இஸ்ரேலிய எல்லைக்குள் ஏவி ஏராளமான விவசாய நிலங்களை எரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன்னர் பலூன் ஏவுதல்கள் நிறுத்தப்பட்டன, அதே நேரத்தில் சர்வதேச நாடுகளின் முயற்சியால் இஸ்ரேலும் ஹமாஸும் போர்நிறுத்தத்தை செயல்படுத்தும் முயற்சியில் தாக்குதகளை மீண்டும் குறைத்தன.

ஆனால், போர்நிறுத்த முயற்சிகளில் மெத்தனம் நிலவுவதால் அதிருப்தியடைந்த ஹமாஸ், வியாழக்கிழமை மீண்டும் பலூன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்