கருப்பின தாய்க்கு பிறந்த அழகான மகள்! தந்தை முன்னோர்களை கண்டுபிடிக்க DNA சோதனை செய்ததில் காத்திருந்த ஆச்சரியம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
2186Shares

கருப்பின தாய்க்கு பிறந்த அழகான பெண் தனது தந்தையின் முன்னோர்கள் குறித்த தகவலை DNA பரிசோதனையில் அறிந்து ஆச்சரியமடைந்துள்ளார்.

Tia Mowry என்ற பெண் அமெரிக்க நடிகையாக உள்ளார். இவரின் தாய் கருப்பினத்தவர் ஆவார், தந்தை வெள்ளை இனமாவார்.

இந்நிலையில் தாயின் குடும்பம் மற்றும் முன்னோர்கள் குறித்து அறிந்த Tiaவுக்கு தந்தையின் முன்னோர்கள் குறித்து தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் அது தொடர்பான DNA பரிசோதனை மேற்கொண்டதில் Tiaவுக்கு பல்வேறு ஆச்சரியங்கள் காத்திருந்தன.

அதாவது Tiaவின் தந்தையின் முன்னோர்கள் பிரித்தானியா, அயர்லாந்து, ஜேர்மனியை சேர்ந்தவர்கள் என அவருக்கு தெரியவந்துள்ளது.

அதே போல தாயின் முன்னோர்கள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கானா, நைஜீரியாவை சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியானது.

இது குறித்து Tia கூறுகையில், என் தாய் வழி முன்னோர்கள் குறித்து எனக்கு தெரியும், ஆனால் தந்தை வழி குறித்து தெரியாமல் இருந்தது.

தற்போது எனக்கு அது குறித்து தெரிந்த விடயங்கள் மகிழ்ச்சியளிக்கிறது.

ஏனெனில் கருப்பினத்தவரான என் தாயை திருமணம் செய்த போது என் தந்தையின் குடும்பத்தார் அதற்கு ஆதரவு தரவில்லை.

தற்போது சமூகவலைதளங்கள் மூலம் என் தந்தை வழி உறவினர்களை கண்டுபிடித்து அவர்களை சந்தித்துள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்