நைஜீரியாவுக்கான கடன்சுமையை தாமே செலுத்தும் பில் கேட்ஸ் அறக்கட்டளை: ஏன் தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

போலியோவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜப்பானிடம் இருந்து நைஜீரியா கடனாகப் பெற்ற தொகையை தற்போது உலக கோடீஸ்வரரான பில் கேட்ஸ் திருப்பி செலுத்த உள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு போலியோவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜப்பானிடம் இருந்து நைஜீரியா 76 மில்லியன் டொலர் தொகையை கடனாக பெற்றிருந்தது.

போலியோவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நைஜீரியா குறித்த நிதியுதவியால் போலியோவில் இருந்து மெதுவாக மீண்டு வந்தது.

கடந்த 2014 ஜூலை முதல் 2016 ஆகஸ்டு வரையான ஆய்வுகளில் நைஜீரியாவில் வெறும் 2 பேர் மட்டுமே போலியோவால் பாதிக்கப்பட்டதாக தெரியவந்தது.

இதேவேளை 1988 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நைஜீரியாவில் 350,000 போலியோ பாதிப்பு இருந்துள்ளது.

இந்த நிலையிலேயே நைஜீரியாவின் கடன்சுமையை தாங்களே ஏற்றுக் கொள்வதாக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையானது ஆண்டுக்கு சுமார் 3 பில்லியன் டொலர் அளவுக்கு நலத்திட்ட உதவிகளை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்