அணுசக்தி விடயத்தில் எங்களுக்கு வரம்புகள் இல்லை! தொடர்ந்து முன்னேறுகிறோம்... ஈரானிய தலைவர் முக்கிய தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஈரானின் அணுசக்தி சம்மந்தமான திட்டத்தில் தற்போதைக்கு எந்தவொரு வரம்புகளும் இல்லை என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி கூறியுள்ளார்.

ஹசன் ரூஹானி, வெளிநாட்டு படைகள் மத்திய கிழக்கிலிருந்து தங்கள் படைகளை திரும்ப பெறுமாறு கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று அவர் அளித்த பேட்டியில், ஈரானின் அணுசக்தி சம்மந்தமான திட்டத்தில் தற்போதைக்கு எந்தவொரு வரம்புகள் இல்லை.

ஈரான் 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்திற்கு வளப்படுத்திய யுரேனியத்தை விட தற்போது அதிகளவு யுரேனியத்தை வளப்படுத்துகிறது.

ஈரான் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது, ஆனாலும் இந்த விடயத்தில் நாங்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறோம் என கூறியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வாஷிங்டன் விலகியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்த விடயத்தை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்